Thiruthangal Nadar Vidhyalaya

INTER SCHOOL COMPETITION – 12-07-2025

பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் – 2025
(கல்வி வளர்ச்சி நாள் மற்றும் பாரதி விழா)
காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 12.07.2025 அன்று நம் பள்ளியில் (கல்வி வளர்ச்சி நாள் மற்றும் பாரதி விழா) பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்களது தனித்திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் பாட்டுப்போட்டி, விவாதம், பேச்சுப் போட்டி, கவிதை கூறுதல், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் சுமார் 10 பள்ளிகளில் இருந்து 206 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று ரேவூர் பத்மநாபா செட்டீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி (நிலை – 1), கலைமகள் வித்யாலயா (நிலை – 2), கொ.சி .சங்கரலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளி (பாரதி விழா) ஆகிய பள்ளிகள் சுழற் கேடயம் வென்றன.