044 – 25993131, 044 – 2599 5555.
Mobile No. 73586 22203
தமிழ் மன்றம்
பள்ளி அணிகளுக்கிடையேயானப் போட்டிகள் 2025 -26
தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பாக 18.07.25 மற்றும் 19.07.25 பள்ளி அணிகளுக்கிடையே போட்டிகள் நடத்தப்பட்டன. 18.07.25 அன்று ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை புதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், சொல் விளையாட்டு பழமொழியும் அதன் உண்மை விளக்கமும் போன்ற தலைப்புகளும், 19.07.25 ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை நாட்டுப்புறப்பாடல் பாடுதல், மாத்தியோசி கண்டுபிடி கண்டுபிடி, தமிழர் மருத்துவம், இலக்கிய பாடலைப் பாடுதல், திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற தலைப்புகளில் போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மொத்தம் 176 மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்புடன் பங்களித்தனர்.