044 – 25993131, 044 – 2599 5555.
மாணவர்கள் தமிழ் இலக்கியத்தின் பெருமையை அறிந்து கொள்ளும் விதமாகவும் தமிழ் மொழியின் மீது உள்ள ஆர்வத்தை மேம்படுத்தும் விதமாக 30. 11. 2018 அன்று இலக்கிய மன்றம் சார்பாக பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பாட்டு, ஒப்புவித்தல் , தனிநடிப்பு, ஓவியம் வரைதல், பேச்சுப்போட்டி, தமிழோடு விளையாடு என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சுமார் ஒன்பது பள்ளிகளில் இருந்து 94 மாணவர்கள் கலந்து கொண்டனர். திருத்தங்கல் நாடார் கல்லூரியில் இருந்து வருகை புரிந்த பேராசிரியர்கள் நடுவராக இருந்து விழாவினைச் சிறப்பித்தனர். போட்டிகள் அனைத்தும் தமிழ்த்துறை சார்பாக நடத்தப்பட்டது.