044 – 25993131, 044 – 2599 5555.
தமிழரின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா நம் பள்ளியில் 12.1.2019 அன்று ,பொங்கல் வைக்கப்பட்டு இறைவழிபாட்டுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.
நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாக நாட்டுப்புறக்கலைகள் அடங்கிய ஆட்டத்துடன் நிர்வாகக் குழு உறுப்பினர்களை விழா மேடைக்குமாணவர்கள் அழைத்து வந்தனர்.ஆசிரியை திருமதி சுஜாதா அவர்கள் வரவேற்புரை வழங்கிய பின்னர் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வாழ்த்துரையுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மாணவர்களுக்கு நொண்டி ஓட்டம், சாக்குப் பை ஓட்டம், கரும்பு உண்ணுதல்,வழுக்குமரம் ஏறுதல் ,பானை உடைத்தல் போன்ற பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்து பாராட்டப்பட்டது. தமிழ் ஆசிரியை திருமதி செல்வராணி அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.